அன்புள்ள வலைதள வாசக மனமே வணக்கம்..
புஸ்தகா வெளியீடாக ஓர் கவிதை நூல் எழுதியுள்ளேன்.
“உடலெங்கும் ஒரு சிறுமி”
பல ஆண்டுகளுக்கு முன் புதிய பார்வை என்ற பத்திரிகையில் வெளிவந்த எனது இக்கவிதையின் தலைப்பு இப்போதும் என்னை ஈர்த்த வண்ணமாக உள்ளது.
கணவன் என்ற ஒரு உறவுக்காக, பல உறவுகளைத் தியாகம் செய்யும் , பெண்ணின் உடம்பில் இப்படிபட்ட துள்ளும் சிறுமிகள் (சமையலறையில் அடைபட்ட நிலையில் ) நீங்களும் கண்டிருக்கலாம்.
தொகுப்பு நெடுகவே வசகனுக்கு இனிய கவிதை அனுபவம் காத்துள்ளது.
வாருங்கள். வாசியுங்கள்.
நேசமும் அன்பும்.
பா.சத்தியமோகன்
5.6.2023


No comments:
Post a Comment