மார்கழி:13
அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிடும். சும்மாவிடுகிறதா இந்த சோம்பல்! அப்படியே படுக்கையில் கிடப்போம். : “இன்னுமொரு அஞ்சு நிமிஷம்” என்று உடம்பு கேட்கும். புத்தி தலையாட்டும். நேரம் கடந்துவிடும். எழுவது தள்ளிப்போகும். பொழுது விடிந்து சூரியனின் கிரணங்களில் படிந்து கடிகாரம் காலை ஏழு எனச் சொல்லும். அடடே எப்படித் தூங்கிப் போனோம்! என்று பறந்து பறந்து நேரத்தைத் துரத்துவோம். ஒரு பொன்மொழி சொல்கிறது. “காலையில் நீங்கள் இழந்த பத்துநிமிடத்தை இரவு படுக்கச் செல்லும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள்!”
“வெள்ளி எழுந்து” என்கிறார் கோதை நாச்சியார். வெள்ளி என்பது சுக்கிரன் வானில் பளீர் எனத் தனியே தெரியும் நட்சத்திரம். மற்ற நட்சத்திரங்கள் போல் மின்னி மின்னி அடங்காது. அளவில் சற்று பெரிதாக வைரக்கல் மூக்குத்தியே போல் நிலைத்த பிரகாசமுடன் காணலாம். இப்படிப்பட்ட வெள்ளியைக் வானில் காண அதிகாலை எழ வேண்டும். மனம் குளிரும் இத்தகைய “வெள்ளி” ஒளிவிட்டு எழும்போது வியாழன் கிரகம் மறைகிறது என்கிற வானவியலை “வெள்ளி எழ வியாழம் உறங்கிற்று” என்று கவிதைத் தமிழில் அறிவியலாகச் சொன்னாள் நமது திருப்பாவையார்.
திருப்பாடல்:
புள்ளின்வாய்க் கீண்டானைப்ப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புகார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ எம்பாவாய்.

No comments:
Post a Comment