அன்றிலிருந்து இன்றுவரை விநாடிக்கு விநாடிக்கு அதிசயங்கள் நிரம்பியதுதான் வாழ்க்கை.உணர்ந்து பார்க்கத் தவறிவிடுகிறோம்.இழந்த பின்பு புரிகிறோம்.காரணம் நமது ஆணவம்.இராணுவத்தில் இறந்தவர்களைவிட, நாட்டில் ஆணவத்தால் இறப்போர் தொகை அதிகமாகிவருவது கண்கூடு.இச்செய்திகளை சிந்திப்பதற்க்கு காரணம் இருக்கிறது.”அப்பா வாசனை” என்று ஒரு சிறுகதை.அச்சிறுகதை அமுதசுரபியில் வெளிவந்து பரிசு பெற்றது(1998).அதனை அடியேன் எழுதியது சிதம்பரம் சிவகாமிஅம்மன் கோவில் வளாகத்தில். அச்சிறுகதை இறக்கப்போகும் தந்தை குறித்த மகனின் மனஓட்டமாக அமைந்திருக்கும் ஒரு பாடல் வரும்:-
”நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லா நெஞ்சப் புலையேனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற்று அலையும் அல்லல்
எல்லாம் அறிவாய் என் எழுத்தறியும் பெருமானே”
இப்பாடல் எதில் வருகின்றதென்று அப்போது தெரியாது. வள்ளல்பெருமான் குறித்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய ஆர்வமும் எழவில்லை இருந்ததில்லை. காலஓட்டத்தில் வடலூரில் குடியேறினோம்.
மேட்டுக்குப்பம் வாழ் அன்னதான வள்ளல் கோவை சிவப்பிரகாச சுவாமிகளுடன் தொடர்பு ஏற்பட்டபோது “எழுத்தறியும் பெருமான் மாலை”என்று அன்புடன் அளித்த தொகுப்பில் வள்ளல் பெருமான் இயற்றிய 5 ஆம் பாடலாக மேற்கண்ட பாடல் இருந்தது. சிலிர்ப்பாக இருந்தது. இது ஏன் அப்போதே எனக்குத் தெரியவில்லை? வள்ளல்பெருமான் உயிர் மீது படிந்திருக்கும் “நான்” என்ற ஆணவ இருளை அடக்கி மிகவும் அவசியப்பட்ட தருணத்தில் மட்டுமே தம்மை அறிவிக்கிறார் என்பதே இதன் பொருள்.”நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும்
பொல்லா நெஞ்சப் புலையேனேன் இவ்வுலகில்
சொல்லா மனநோயால் சோர்வுற்று அலையும் அல்லல்
எல்லாம் அறிவாய் என் எழுத்தறியும் பெருமானே”
இப்பாடல் எதில் வருகின்றதென்று அப்போது தெரியாது. வள்ளல்பெருமான் குறித்து அக்காலகட்டத்தில் மிகப்பெரிய ஆர்வமும் எழவில்லை இருந்ததில்லை. காலஓட்டத்தில் வடலூரில் குடியேறினோம்.
அதுதான் ரகசியம்.அந்த மாலையின் 31 பாடல்களும் அபாரமான உள் தோண்டல் கொண்டவை.
நம்மை நாமே விமர்ச்சிக்கவும் உணரவும் அழவும் தொழவும் செய்பவை. என்னுடைய முந்தை வினை தொலைத்து உன் கழலுக்கு ஆளாக்க மாட்டாயா ? என்று ஆரம்பிக்கிறது முதல் பாடல். கடைசி பாடலில் எனை ஆள்வது உன் கடனே என்று முடிக்கும்போது “எனை உடையாய்” என்பார் வள்ளல் பெருமான். நம்மையெல்லாம் உடமையாய் வைத்திருப்பவர் சிவபெருமானும் சக்தியும்.
திருவொற்றியூர் சிவபெருமான் - அழகம்மை அலாதியான சரணம் புகுந்து தம்மை ஆண்டு கொள்ள இறைஞ்சுகின்ற வள்ளல்பெருமான் அடியேனுக்கு 2002ல் நிகழ்ந்த சிறுகதையின் வரிகளாக நிகழ்ந்து தடுத்தாண்டு கொண்டதாகவே தோன்றுகிறது. “எனக்கு உனக்கு முன் அறியேன் பின் அறியேன் எப்படியோ ஐயா உன் சித்தம் எழுத்தறியும் பெருமானே” வள்ளல்பெருமான் திருவடிகளே சரணம். அருட்பெரும் ஜோதி.அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.
*****
No comments:
Post a Comment