மார்கழி :17
திருப்பாடல்:17
இரண்டு பேர் உறங்குகிறார்கள். ஓங்கி உலகளந்த உத்தமன் ( மனசாட்சி) உறக்கம் காட்டப்படுகிறது. “யசோதாய்” என நீளமாய் நீநீநீட்டி அழைக்கப்பட்டு ( மனசின் பெண்பாகம் ) உறக்கம் கொள்வதாய் சொல்லப்படுகிறது. செல்வப் பரந்தாமனே உறங்கிவிட்டால் இந்த உலகம் என்னாகும்!
திருவள்ளுவர் பேருந்தில் 112ரூபாய் கொடுத்து சென்னைக்கு ஏறுகிறீர்கள். இரவு இரண்டு மணிக்கு கண்விழித்துப்பார்த்தால் ஓட்டுநரும் உறங்குவதை ஒரு நொடி கண்டு விட்டீர்கள்! எப்படி இருக்கும்! உறங்காதீர் என்று எழுப்புவீர்களா இல்லையா?
நீதி:- “உலகம் என்கிற மாயை படைத்தீர்கள். அது பற்றி பலதடவை கண்ணபெருமானே நீ விளக்கியும் , விட்டில் பூச்சிகளாய் நாங்கள் காம, குரோத, லோபத்தில் சிக்கிய மக்களாம் எங்களை எழுப்பும் ஓயாத பணியை விட்டு உறங்கிவிடாதீர்கள்! எழுந்திருங்கள்”
திருப்பாடல்:
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோ எம்பாவாய்.

No comments:
Post a Comment