திருப்பாடல் 16
மார்கழி 16
நேசம் வைத்து ஆரம்பித்த செயல்களைக்கூட நடுவில் நாம் நிறுத்திவிடுகிறோம். “அது இது” என எவ்வளவோ சப்பை க்கட்டுகள் கட்டினாலும் அதற்கு உள் காரணம் ஒன்று இருக்கும். வாயால் முன்னம் ஒன்று பேசினோம். இப்போது மாற்றி விட்டோம். மாற்றி மாற்றிப்பேசுகிறவர்களை “உனக்கு இரட்டை நாக்கா? என்பார்கள். தண்ணில கிடக்குற நாக்கு எப்படியும் பேசும்” என்பார்கள். ஏன்? கதவு போட்டு நல்ல காரியங்க¨ளை இழுத்துமூடியதற்கு என்ன காரணம்? மரக்கதவு தேக்கு கதவு போட்டால் அடைத்தே வைத்திருப்போம். நேசம் கொண்டு ஒரு கதவு செய்தால் அதனை நம்மால் திறக்க முடியும்தானே! ஆண்டாள் நாச்சியார் வாய் மலர்கிறதை இதோ பாடலில் கேளுங்கள்.
திருப்பாடல்:
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப்பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா!நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment