மார்கழி:26
திருப்பாடல்:26
பாஞ்சன்னியம் என்கிற சங்கு மகாபாரதப்போர் துவக்கத்திலும் முடிவிலும் ஓசை எழுப்புகிறது. காயிலே நீ புளிக்கிறாய் அதுவே கனியானதும் அதே இடத்தில் நீ இனிக்கிறாய் அது நீயே எமது கண்ணபெருமானே! “பறை” என்கிற கருவி இசை கலந்து எங்கள் குரலையே இசைக்கருவியாக்கி பல்லாண்டு இசைக்கிறோம். “கோல விளக்கு” போன்ற துணை உடைய ஆலின் இலை வாழும் கண்ணா! ஆலின் இலைக்கு சமானமான அழகும் பசுமையும் உலகில் எங்கேனும் உண்டா! உன் அருளும் அந்த ஆல மரத்தின் இலைகள் போல பசுமையானது. எங்கள் உள்ளத்தின் மலட்டுத்தன்மைகளைப் போக்குவது. ஆம். கண்ணா எமக்கு நீ அருளமாட்டாயா?
திருப்பாடல்:
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டிலையேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் பொய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே! கொடியே! விதானமே!
ஆலின் இலையாய்! அருளேலோ எம்பாவாய்.

No comments:
Post a Comment