வாழ்த்துமடல்
வாழ்க மணமக்கள்:-
திருவருள் கூட்டும் திருமணத்திற்கு அழைத்தீர்கள் வரச்சொல்லி !
நன்றி .. ! பரிசொன்று தர எண்ணி கவிதை வார்த்தேன்
“கவிதைக்கு ஈடாகாது எதுவும்
என்ற பெருமிதமுடன்
மணமக்களை மனதால் தழுவி பாடுகின்றேன் கவியை ;
அன்பு பொழியட்டும் வாழிய நீவீர்
திருமணப் பொறுப்பு ஏற்கவிருக்கும் உள்ளங்களே
திருமணம் என்பது என்ன ? எண்ணக்கலப்பு; அன்பின் கொண்டாட்டம்
மணமகன் பொறுப்பு என்ன? நிறையோ குறையோ
கைபிடித்த மணமகள் மகிழ்ச்சிக்கு உரியவர் ஆகிடுதல்
கண் + அவர்= கணவர் ஆகி, மனைவிக்கு உலகக்கண் திறத்தல் செய்தல்
நீங்கள் “இருவர்” எனினும் “ஒன்றே” ஆகிடுக பார்வையும் கருத்தும் .
மணமகள் பொறுப்பு என்ன?
“ஆகாறு” எனும் வரவுக்குள் வாழ்ந்து
செலவு எனும் “போகும் ஆறு”அகன்று விடாமல் வாழ்ந்து காட்டுதல்
வலப்புறம் நின்று மணமகனுக்கு வலக்கரமாய் மாறுதல்
இருவரும் சேர்க ! ஆதார் அட்டையும் உரிமையுமாய் இணைக.
குருவருள் பெற்று திருவருளில் நிலைக்க சிவசக்தி தியானிக்கிறோம்
ஆண்டுக்கொருமுறை குலதெய்வ வழிபாடு செய்து
முன்னோர் காட்டிய அன்பு வழியில் வென்றிடுக
பொருளாதாரக் கவலை வேண்டாம் பிறர் பசிப்பிணி நீக்கும் பண்பே
பக்தியுடன் அனைத்தும் தரும் என உழைத்திடுவோம். ஓம். ஓம்
அன்பு நெஞ்சமுடன்....
No comments:
Post a Comment