பாடல்: 16
நேசம் வரவேண்டும். வெறும் வார்த்தைகள் போதாது. அன்புப் படிக்கட்டுகளுக்கு ஒரு படி மேல் ஏறினால் அது நேசமாகின்றது.
அதனால் செய்யப் பட்ட கதவு அது நிலையானதாக இருக்கும்.
அதுதான் நேச நிலைக்கதவு.
அதனைத் திற என்கிறாள் மார்கழி எனும் குளிர்ப்பெண்.
மனம் எனும் பெண் கண் விழிப்பாளா!
பாடல்: 17
பார்க்கும் இடமெல்லாம் நந்தகோபாலனே தெரிகின்றான். இப்போது பக்தி நிலை மனப்பெண் பூண்டாள். பாரதியார் போல் “பார்க்குமிடம் எல்லாம் நான்” என்கிறாள்.
பரவெளியைப் பார்த்தாள். நீலமேகம். நீலக்கண்ணன் தெரிந்தான். “அம்பரமே” என்று கூவினாள்.குளிக்கப்போனாள். குளிர்ச்சி உடலில் பட்டது.
அவன் மேனி அல்லவா என் மீது படுகிறது இந்த நீரின் வழியே? என்று உருகினாள்.
குடிநீரைப் பார்த்தாள். அவன் தந்த மழைமேகத்தால் இப்போது தாகம் தீர்க்கிறேன் என உள்ளம் நைந்தாள். “தண்ணீரே!” என அழைத்தாள்.
பசித்தது. தட்டெடுத்து சாப்பிட அன்னம் பரிமாறினாள் அன்னை. “ சோறே! சோறே!” என்றாள். ஏனம்மா இது சோறுதான் என்றாள் தாய்.
தாயிடம் காதலை எப்படிக் கூறுவாள். சோறும் அவர்தானே. எப்படி உண்பேன் என்று ஆனந்தத் திகைப்பு கொண்டாள். அன்பிலே தித்திக்கிறாள் மனம் எனும் பெண்.
-- தொடர்வோம்.
No comments:
Post a Comment