இரட்டை மாட்டுவண்டிதான் கணவனும் மனைவியும்!
ஒருவர் தோள் பாரம் தாங்கமுடியாமல் ஒருவர் மீது
ரகசியமாகவும் மெல்லமாகவும் மாற்றப் பார்ப்போம்
ஒரு மாட்டுக்குப் புரியும் ஒரு மாட்டுக்கு வலிக்கும்
இரண்டு மாடுகளுக்கு மட்டுமல்ல
மாட்டுவண்டியும் உணர வாய்ப்பில்லை -
பூமிதான் பாரம் தாங்குகிறதென்ற உண்மை!
No comments:
Post a Comment