மார்கழி : 21
திருப்பாடல்:21
நமது ஆணவம் , நம்மை மிகப்பெரிய கடவுள் சக்தி முன்னம் நின்று தொழவிடாமல் தடுக்கிறது. வாழ்வுச்சக்கரம் சுழல்கிறது. வெற்றி வரும்போது துள்ளிய மனம், அடிகளும் ஏமாற்றங்களும் பெருகும்போது வலிக்கிறது. தன்னை ஒரு பலவானாக நினைத்த மனம், அடங்க ஆரம்பிக்கிறது. “வலி” என்று திருக்குறள் சொல்கிற வலிமை - தன்னிடமிருந்து வந்தது அல்ல என்று உணர்கிற மனம் , இறைவாசல் தேடி அலைகிறது. அடிபணிகிறது. அந்த நிமிடம் வரையிலும் தன்னை ஒரு பலவானாகாவும் ,சக்தியாகவும் இறைவனுக்கு மாற்றானாகவும் நினைத்த மனம் தொலைந்து போகிறது. உன் வாசலுக்கு “கண்ணா ! நாங்கள் மாற்றான் ஒருவன் தாங்கமுடியாமல் வந்து உன் அடி பணிவது போல பணிகின்றோம்.” என்று கெஞ்சும் திருப்பாடல் இது. ஆணவம் சாகிற இடத்துக்கு வருவது அத்தனை சாதாரணமா என்ன! ஆண்டாள் நாச்சியாரால் அது முடிகிறது.
திருப்பாடல்:
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய் ! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment