Thursday, 13 December 2012

அறியான்



எல்லாம் எல்லாம் என்னால் என்னால் என்றான்
எதற்கும் எதிலும் தானேதான் என்றான்
அடக்கிப்பார்ப்பதில் அளவிலாமல் போனான்
தானே தானே என்றவனை
தாக்கிபோட்டதுவோர் “தானே” புயல்
தேதி அறிந்தான் நேரம் அறிந்தான் இட எல்லை குறித்தான்
என்றாலும் தடுக்க இயலாமல் ஆனான்
இப்போது அடங்கிக் கிடப்பான் இவன்
மின்சாரமும் வீடும் நிவாரணமும் உப்பும் சோறும் உறவும்
மீண்டும் கிட்டியதும்
மீண்டும் “தானே” என்பான்
தன்னை மீறிய இயற்கை அறியான்!

1 comment:

  1. தானே தானே என்றவனை
    தாக்கிபோட்டதுவோர் “தானே”

    ...
    மீண்டும் “தானே” என்பான்//

    புயலை முன்னிட்டு பொருத்திப் பார்த்தவொரு வாழ்வியல் ... வியக்கிறேன்... வித்தியாச நோக்கில்.

    ReplyDelete