Wednesday, 12 December 2012

குழப்பமே நீ சொல்

12.12.2012 அப்பாடா! ஒரு வழியாக மீண்டும் வலைப்பூவில் இணைகிறோம். (நன்றி பாரதிகுமார்)நலம்தானே? நலமே விழைகிறோம்.
சிந்தனை-1
அன்று முதல் இன்றுவரையில் ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் மோதுவது இருந்திருக்கும். இது மனிதருக்கு மனிதர் மாறலாம். ஆனால் ஒரே சிந்தனை இருவருக்கு ஒரே சமயம் ஏற்படுமா. நாம் பேச நினைப்பதையே எதிரில் வருபவர் பேசும்போது ஆச்சரியமாக வாய் பிளக்கலாம். ஆனால் பாருங்கள்...நாம் பேச நினைப்பதையே பாண்டிச்சேரி பண்பலை ரேடியோவும் பேசினால் ?! இது எனக்கு புதிராக உள்ளது. என்னுடைய நெஞ்சம் நினைப்பதை அந்த அறிவிப்பாளர் கிட்டத்தட்ட பேசுகிறார். ஒத்த சிந்தனைகளின் ஓட்டம் ஒரே புள்ளியில் வருமோ. அதன் அதிர்வு இதுவோ. உங்களில் யாருக்காவது இப்படி உண்டா. எழுதுங்களேன். (ஒரு வேளை நீங்கள் கேட்க நினைப்பதை நான் கேட்கின்றேனோ!)

1 comment:

  1. ஒரு அபூர்வ நாளில் பதிவுலகில் மறு பிரவேசம் ! ஒத்த சிந்தனையுடையவர்களின் எண்ண அலைகள் ஒன்று போலவே தான் இருக்கிறது!

    (word verification - ஐ எடுத்தால் கருத்திடுபவர்களுக்கு சுலபம்.)

    ReplyDelete