அன்புடையீர் வணக்கம்.சில நிமிடங்கள் முன்பு துவங்கப்பட்ட இந்த சில விநாடி குழந்தை பிளாக்கிற்கு உங்களை அடியேன் வரவேற்கிறேன். இது என்ன புதுவிதம்! வானவெளிக்கு காற்றை வரவேற்பதா! ஆம். வரவு வைப்பதுதான் வாழ்வு,செலவு வேறுவிதம்! இனி நாம் உரையாடப்போகிறோம்! எனக்குப்பிடித்தவை- தொட்டவை - கேட்டவை - உங்களோடு பகிர ஆசை.
உடனடியாக பதில் எழுதவும் என்று தபாலில் படித்திருக்கிறேன். அப்படி ஒரு சாத்தியம் -ஒரு பகிர்தல் - வான்வெளியில் எலக்ட்ரானிக் எழுத்துகளாகத் திரியும் இந்த கடிதத்தின் பயனாகட்டுமே. நேசமான மனித உறவுகள் அருகில் இருக்கும் சாத்தியங்கள் குறைந்த வாழ்க்கை நிலையில் இந்த மின் எழுத்துகளும் சிந்தனைகளும் ஒருவித வெறுமையை இட்டு நிரப்புகின்ற ஆற்றல் உடையவை ஆகின்றன. நன்றி.
சந்திப்போம்.
பகிர்வு-1
அதிர்ச்சியாக இருந்தது. அலுவலக நண்பர், வயது 47கூட இருக்காது. ராஜமோகன் இறந்துவிட்டாராம். அட்டாக் என்றனர். மன இறுக்கம் காரணம், வேலை பளு காரணம். மனிதர் தேனீ போன்ற உழைப்பாளிதான். நல்ல மனிதர்.மாதா மாதம் தேவார நால்வர் தொண்டுப்பாதை என 16வருடங்களாக அடியேன் நடத்தும் ஒல்லியான பணவசதி கொண்ட அமைப்புக்கு ஒண்ணாம்தேதி ஆன கையோடு, எங்க காணோம் நேத்து? என்று வாஞ்சையோடு கேட்டு இருநூறு ரூபாய் கொடுப்பார், நான் பில் போட்டு கொடுப்பதுபோல ஒரு வார்த்தை சொல்வதுண்டு. “உங்கள் உள்ளம் வாழ்க, உங்கள் இல்லம் வாழ்க” என்பதுதான் அந்த வார்த்தை. சொன்ன அடுத்த கணம்,”எல்லாரும் வாழட்டும்” என்று புன்னகைப்பார்.கை குலுக்கியவாறு வாழ்த்தும் வாழ்த்தை பெறமாட்டார்.தவிர்ப்பார்.ஏன்? பிறருக்கு உதவுவது வெளியே தெரியக்கூடாது என்ற எண்ணம் அது. அந்த ஒரு எண்ணம் மட்டுமல்ல, இன்னும் நிறைய உதவாமலே இந்த வாழ்த்து கிடைத்துவிட்டதே என்ற மதிப்பான எண்ணம் அது. அவ்வளவு நல்ல மனிதர்.
** தனது அப்பாவுக்கு பாடைகட்டி பிணத்தை எடுத்துவைத்தபின் ஒரு முறை கடைசியாக குடத்தில் நீரூற்றி வந்தபின் அழுதுகொண்டே பிரியாவிடை கொடுத்து ஓடி வந்த மகளின் முகம் ! அந்த மாலை நேரம்! அந்த மகளின் கண்கள்`! அவரது கடமையை நிறைவேற்ற இனி யார் உண்டு? கேள்விகளில் முழுகிப்போனேன். மூத்தது மகள். பத்தாவது படிக்கும் மகன்தான் கொள்ளிவைக்க புறப்பட்டான். இடுகாட்டுக்கு அனுமதி பெண்ணுக்கில்லை. கண்களை மறைத்த காட்சி அந்த 16.11.2011 மாத பூச நாள். வியாழக்கிழமை. விதி என்ற இரண்டே எழுத்துகள்! திணறித் திணறி இதோ இன்று டிசம்பர் மாதம் 4.12.2011ல் ஒரு போன் வருகிறது. “ராஜமோகன் பிரெண்டு சார் நானு! மாசாமாசம் தருவாருல்ல?”
“ஆமாங்க”
“அவரு பொண்ணு எனக்கு போன் பண்ணிச்சு எனக்கு. “அங்கிள்! அப்பா யாருக்கோ மாசம் ஆனா 200 எடுத்துவப்பாரு. அவரு யாரு என்னன்னு தெரியுமான்னு கேட்டது. பணமும் கொடுத்தது. எப்ப நான் உங்களப்பாக்கலாம் சத்தியமோகன்?”
மனம் கனத்தது. நல்லவர்கள் வாழ்வதில்லை என்று புலம்புவார்கள். பார்த்திருக்கிறேன். ராஜமோகன் போன்ற நல்லவர்கள் சாவதில்லை என்றுதான் தோன்றியது.
அன்பன்
பா.சத்தியமோகன்

ராஜமோகன் என்னும் நல்ல மனிதரை பற்றி சத்தியமோகன் என்னும் நல்ல கவிஞரின் பதிவு படித்தேன் . கண்கள் பனித்தன . நல்ல மனிதர்களுக்குள் வாழ்கிறது சிவம் .. அன்பே சிவம் .. போன டிசம்பரில் துவங்கிய உங்கள் வலைப்பூ இந்த டிசம்பர் அதுவும் 12-12-12- ல் மறுமலர்ச்சியடைந்து இருப்பதற்கு என் வாழ்த்துகள் ..
ReplyDeleteநேசமான மனித உறவுகள் அருகில் இருக்கும் சாத்தியங்கள் குறைந்த வாழ்க்கை நிலையில் //
ReplyDeleteஇடுகாட்டுக்கு போகா விட்டாலும் அப்பாவின் ஆன்மா சாந்தியடைய சாத்தியப் படுத்திய அப்பெண்ணும் அவரை வளர்த்தவரும் போற்றப்பட வேண்டியவர்களே!
முதல் பதிவே நெகிழ்ச்சியாய்... அதுதானே கவி மனசின் அழகு!