முல்லா கதைகள்: 5
********
ஒரு சமயம் முல்லா ஒரு கல்யாண வீட்டுக்குச் சென்றார். கல்யாண வீட்டு வாசலில் தயங்கி இன்று “ காலில் உள்ள செருப்பை வெளியே விட்டு செல்வதா?” என்று யோசனை செய்தார்.
ஏற்கெனவே ஒரு கல்யாணவீட்டில் ஒரு ஜோடி செருப்பை இழந்த அனுபவத்தால் , இம்முறையும் ஒரு ஜோடி செருப்பை ; அதுவும் புதிய செருப்பை இழக்க விரும்பவில்லை. அதனால் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி, யாரும் பார்க்காத சமயம் தன் சட்டைக்குள் வைத்துக்கொண்டு கல்யாண வீட்டுக்குள் சென்றார்.
முல்லாவை வரவேற்ற கல்யாணவீட்டார், அவர் சட்டைப் பைக்குள் ஏதோ இருப்பதைக்கண்டு “அது என்ன” என வினவினர். அதற்கு முல்லா “ஒரு புத்தகம்” என்று கூற; அவர்கள் “ என்ன புத்தகம்?” என்று வினவ அதற்கு முல்லா “வேதாந்த புத்தகம்” என்று சொன்னார்.
“அந்த புத்தகத்தை எங்கு வாங்கினீர்கள்?” என்று அவர்கள் கேட்க “ செருப்புக்கடையில் வாங்கினேன்” என்று முல்லா பதில் சொல்ல கேட்டவர்கள் திகைத்தார்கள்!
நீதி: இந்தக்கதையிலும் புத்தகத்தை வாங்கும் ஆசைவயப்பட்டு தவறான கேள்வி கேட்கும் நம் வழக்கத்தை உணரலாம். “எங்கேஅந்தப் புத்தகத்தைக் காட்டுங்கள்?” என்ற கேள்வி கேட்டிருக்கலாம்.
இன்னொரு கோணமும் இக்கதை நமக்கு உணர்த்துகிறது. உலகியல் பொருள்களுக்கே நாம் பாதுகாப்பும் மரியாதையும் தருவதால் எவ்வளவு உயர்ந்த விஷயத்தையும் மட்டமான பொருள் பற்றுக்காக பொய் சொல்லப் பயன் படுத்தும் அற்ப குணம் நமக்கு இருக்கிறது என்பதற்கே “வேதாந்த புத்தகம்” என்ற சொல் இக்கதையில் உள்ளது.
No comments:
Post a Comment