Monday, 12 January 2026

ஒளவையின் தனிப்பாடல்கள் - 1

 ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொன்று எளிது


வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்

தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - ‘யாம் பெரிதும்

வல்லோமே' என்று வலிமை சொல வேண்டாங்காண்

எல்லார்க்கும் ஒவ்வொன்றும் எளிது.


மனிதர்களே

ஒரு மனிதன் என்னிடம் தம்பட்டம் அடித்துக்கொண்டான். 

“என்னால் எதுவும் செய்ய முடியும்”

அவனை அழைத்து சென்று கணாங்குருவி கூடு ஒன்றைக் காட்டினேன். வலிமையுடைய கரையான் புற்றைக் காட்டினேன்.. தேன் சிலம்பி எனப்படும் தேனீயின் கூட்டைக் காட்டினேன்.. 

அசந்து போனான். திகைத்தான். பிரமித்தான்.

இதெல்லாம் உன்னால் செய்ய முடியுமா என்று நான் கேட்பதற்கு முன்னமே “இதெல்லாம் என்னால் செய்ய முடியாதவை!” என்றான்.

அவர் அவர் திறமை , தகுதிக்கு ஏற்ற ஒரு செயலைச் செய்வது 

எளிதாக  இருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது.


சிக்கலாக செய்ய முடியாததாக ஒருவருக்குத் தோன்றும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு மிக எளிதாக இருக்குமே தவிர எல்லோரும் எல்லாமும் செய்துவிட இயலாது என்பதை ஒளவையின் தனிப்பாடல்கள் மூலம் உணர்வோம்.

 

**********

 

No comments:

Post a Comment