மார்கழி :14
நமக்கு நம் உள்ளே இருக்கும் நாக்கு வெளியில் தெரியவில்லை. ஆனால் பேச்சு உலகில் பேச்சு மட்டும் எழுப்புகிறவர்களால் நாம் உள்ளோம். இல்லாததும் பொல்லாததும் பேசி வருகிறோம். நிறைய பேசுகிறவர்களே மாட்டிக் கொள்வார்கள். திருப்பாவையில் ஒரு தோழி “நாளைக்கு நானே வந்து சீக்கிரம் எழுப்புவேன்” என்று உத்தரவாதமாய் பேசி அந்த வாக்குறுதி மறந்து உறங்கிவிடுகிறாள். ஆண்டாள் நாச்சியார் இபடிப்பட்டவர்களை “நாணாதாய் நாவுடையாய்:” என்று பட்டம் தருகிறார். உண்மை சொல்லவேண்டும் என்கிற பொறுப்புடன் நடந்துகொள்ளாத நாக்கு வெட்கமில்லா நாக்கு. ஆடை அணியாத நாக்கு. நிர்வாண நாக்கு என்று உறுதிப்பட கூறுகிறது இப்பாடல்.
திருப்பாடல்:
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவாள் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment