மார்கழி-3
பாடல்:3
“நீ என்ன பெரிய உத்தமனோ!” என்று கோபத்தில் நேர்மையை கேலி பேசுவார்கள். அப்படியே எரிகிற மாதிரி இருக்கும் அந்த வார்த்தை. ஏன்? நம்முடைய உள்மனசை அடுத்தவர்கள் எடை போடும் நேரம் அது. ஆக, உத்தமன் என்ற சொல் வலிமை மிக்கது. சரி. உத்தமன் எப்படி இருப்பான். நம்மைப் போன்றேதான் இருப்பான். என்ன என்ன குணங்கள் இருக்கும் என்று யோசித்தால், இவை இவை இருக்கும் என்கிறார்கள் பெரியவர்கள். உத்தமன் என்பவன் மிக நல்லவன். தவசீலன். ஏதேனும் ஒரு திருமுறையை தம் வாழ்வில் பின்பற்றி வாழ்பவன். ஆசனம், பிராணயாமம் போன்ற யோகப்பயிற்சி உள்ளவன். வழிபாடு செய்பவன். தியானம் உண்டு. தவம் உண்டு. இப்படி இருக்கின்றவனால் தன் சிக்கல் மட்டுமல்ல ,பிறரது சிக்கலுக்கும் தீர்வு ஏற்படும். அந்த ஆற்றல் உள்ளவன் அவன். சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள், பஞ்சபூதங்கள் இவனுடன் இணக்கமாக ஒரு நெட் ஒர்க்கில் தொடர்பு கொள்ளும் என்கிறார்கள்.
கெட்டவன்,சாதரணமானவன்,நல்லவன்,உத்தமன், துறவி, மகான், தீர்க்க தரிசி என்ற ஏழு நிலைகளில் உத்தமன் நிலை முக்கியம். அதனால்தான் “ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்று ஆரம்பிக்கிறது மூன்றாம் திருப்பாடல். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்கிற வள்ளலார் வாக்கு.
பாடல் :3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்குபெருஞ் செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலைப்பற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

No comments:
Post a Comment